எதிர்வரும் நாள்களில் மண்ணெண்ணெய் விலையை கட்டாயம் அதிகரிக்க வேண்டியேற்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நாட்டு மக்களுக்கு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் என்பவற்றை குறைந்த விலைகளிலேயே அரசாங்கம் வழங்கி வந்தது. அதற்காக ஏற்படும் மேலதிக செலவுகளை திறைசேரி ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆயினும் தற்போது அவ்வாறு செய்ய முடியாது.
மண்ணெண்ணெய் தற்போது 87 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதற்காக 420 ரூபா செலவு ஏற்படுகிறது. அதனால் எதிர்வரும் நாள்களில் கட்டாயமாக மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
Discussion about this post