திருநெல்வேலியில், யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்துக்குப் பின்புறமாக உள்ள அரச ஊழியர் ஒருவரின் வீடு உடைத்து 50 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கும், இரவு 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நடந்துள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் உறவினர் வீடொன்றுக்குச் சென்ற சமயம் வீடு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த நகைகள் திருடப்பட்டுள்ளன என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post