அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்லயிருந்த 21 பேர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் வைத்தே இவர்கள் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுவாஞ்சிகுடி மற்றும் தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று இரவு 10 மணியளவில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் கிரான்குளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் நான்கு பெண்கள் அடங்களாக 21பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
இவர்கள் அவுஸ்ரேலியாவுக்கு செல்வதற்காக பயன்படுத்தவிருந்த இரண்டு படகுகளையும் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதுடன் பெருமளவு எரிபொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் விசேட அதிரடிப் படையினராலும், பொலிஸாராலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Discussion about this post