அச்சுவேலி, ஆஸ்பத்திரி வீதியில் நடந்து சென்ற பெண்களிடம் கத்தியைக் காட்டி அச்சுறுத்தி நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
கொள்ளையர்கள் காதில் இருந்த தோட்டை இழுந்துப் பிடுங்கிச் சென்றதால் காது அறுந்த நிலையில் பெண் ஒருவர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது. வீதியால் மூன்று பெண்கள் நடந்து சென்ற நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் விலாசம் கேட்பது போன்று அவர்களுடன் உரையாடியுள்ளனர்.
திடீரென கத்தியைக் காட்டி அச்சுறுத்தி அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையிட்டதுடன், பெண் ஒருவரின் காதில் இருந்த தோட்டை பிடுங்கிச் சென்றுள்ளனர்.
இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக வழிப்பறிக் கொள்ளைகள் நடைபெறுகின்றன என்று தெரிவிக்கும் மக்கள், பொலிஸார் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post