பாடசாலையொன்றில் திடீரென 100 வரையான மாணவிகள் நடக்க முடியாமல் அவதிப்பட்ட நிலையில் அவர்களை தூக்கிக்கொண்டு சக மாணவிகள் மருத்துவமனைக்கு செல்லும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கென்யா நாட்டில் காகமேகா நகரில் உள்ள எரேகி பெண்கள் மேல்நிலைப்பாடசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கால்கள் செயலிழந்து நடக்க முடியாமல்
பாதிக்கப்பட்ட மாணவிகள் கால்கள் செயலிழந்து நடக்க முடியாமல் அவதிப்படுவதாக தகவல்கள் தெரிவித்தன.
இந்த திடீர் பாதிப்பால் கிட்டத்தட்ட 100 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கல்வி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்ட பாடசாலைக்கு விரைந்து நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிகளிடம் இருந்து இரத்தம், சிறுநீர் மற்றும் மலம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கிசுமு மற்றும் நைரோபியில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
Discussion about this post