பாடசாலை பாடத்திட்டத்தில், ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கான விசேட அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் வேலை வாய்ப்புகளை இலக்காக கொண்டு, எதிர்காலத்தில் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணிகளை முறைமைப்படுத்தும் நோக்கத்துடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோது, அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் பாடசாலைகளில் 6ஆம் தரம் முதல் ஜப்பானிய மொழியை பாடமாக இணைப்பதற்கு கல்வி அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post