பிரான்ஸில் பயன்படுத்தப்படாத பாடசாலை ஒன்றில் அகதிகள் குடியேறியுள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை குறித்த அகதிகளை பொலிஸார் வெளியேற்றினர்.
இந்த சம்பவம் மத்திய பரிசில் உள்ள Place du Palais Royal பகுதியில் அமைந்துள்ள பயன்படுத்தப்படாத பாடசாலை ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது.
அங்கு 450 அகதிகள் கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுக்கான தங்குமிடங்களை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
கிட்டத்தட்ட 77 நாட்களாக அவரகள் அங்கு தங்கியிருந்தனர். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என மொத்தம் 450 அகதிகள் அங்கு தங்கியிருந்த நிலையில், அவர்களுக்கான மாற்று தங்குமிடம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர் மற்றும் Utopia 56 நிறுவனத்தின் (அகதிகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனம்) அகதிகளை பேருந்துகளில் ஏற்றிச் செல்ல உதவி செய்தனர்.
Discussion about this post