கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மாணவர்களுக்கு இலவச காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கல்வி அமைச்சர் ஸ்டீவன் லீஸ் மற்றும் சிறுவர் நல அமைச்சர் மைக்கல் பார்சா ஆகியோருக்கு கடிதம் ஊடாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படடுள்ளது. மாணவர்களுக்கான போசாக்கு திட்டங்கள் போதுமானதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உணவு வங்கிகளில் நலன் பெற்றுக் கொள்வோரில் 30 வீதமானவர்கள் 18 வயதுக்கும் குறைந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மாகாணத்தின் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் காலை மற்றும் மதிய உணவுகளை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமைப்புக்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளன.
இதேவேளை, இந்தக் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் அதிகாரபூர்வமாக எவ்வித பதிலையும் இதுவரையில் வெளியிடவில்லை.
Discussion about this post