இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்புப் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை நால்வரடங்கிய குழுவால் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்தார்.
சிவானந்தன் ஜெயக்குமார் (வயது 42) என்ற நபரே காயமடைந்தவராவார்.
ஆலயமொன்றில் இடம்பெற்றுவரும் நிர்வாக மோசடிகள் தொடர்பில் அண்மையில் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து முறைப்பாடு வழங்கிய நபர் மீதே இந்த வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post