அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியில் முகமுடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வாள் மற்றும் கத்திகளை காட்டி அச்சுறுத்தி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இரவு 7மணியளவில் ஆவரங்கால் – வன்னியசிங்கம் வீதியால் பயணித்த நபரிடம் மோட்டார் வண்டியில் முகமுடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வாள் மற்றும் கத்திகளை காட்டி அச்சுறுத்தி 15 ஆயிரம் ரூபா வரையான பணம் உட்பட உடைமையில் வைத்திருந்த ஆவணங்களையும் பறித்துச் சென்றனர் என்று கூறப்படுகிறது.
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லைவெளி உட்பட பல்வேறு பகுதியில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலின் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றும்ம், அதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post