யாழ். நகரப் பகுதிகளில் டெங்கின் தாக்கம் திடீரெனத் அதிகரித்துள்ளது. கடந்த இருவாரத்தில் மாத்திரம் 22 பேர் டெங்குத் தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்ரெம்பர் மாதத்தில் 37 பேர் டெங்குத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ளது. இதனால் மழைநீர் தேங்கும் இடங்களில் நுளம்புப் பெருக்கம் அதிகரிக்கும். இதனால் டெங்குத் தாக்கம் மேலும் தீவிரமடையும் அபாயமுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்த மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் மக்களும் தமது சுற்றாடலை மிகமிகத் தூய்மையாகப் பேணி இந்தப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த ஒத்துழைக்க வேண்டும்.
சுகாதாரப் பிரிவினர் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு டெங்கு சம்பந்தமான விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாட்டுகள் குறித்து தெளிவுபடுத்துவார்கள்.
அத்துடன் நுளம்பு பெருகக்கூடிய சூழலை அடையாளங்கண்டு அவற்றைத் துப்புரவு செய்யாவிடின் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் – என்று சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
Discussion about this post