வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து ஆலயத்தின் நிர்வாகத்தினர் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை முற்படுத்த வேண்டும் என்று வவுனியா நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களமும், நெடுங்கேணி பொலிஸாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்ததுடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கையும் தாக்கல் செய்திருந்தனர்
இது தொடர்பான வழக்கு விசாரணைகள் வவுனியா நீதிமன்றில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை ஆதராங்களுடன் கண்டறிந்து நீதிமன்றத்தில் முற்படுது்தப்பட வேண்டும் என்று பொலிஸாருக்கு நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை குறித்த வழக்கு தொடர்பாக நெடுங்கேணி பொலிசாரால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு ஆலயத்தின் நிர்வாகத்தினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post