வல்வெட்டித்துறை பகுதியில் பல்வேறு திருட்டுக்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காங்கேசன்துறை குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் நேற்றுமுன்தினம் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து அரைப் பவுண் காப்பு உருக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்றும் கைது செய்யப்பட்டவர்கள் 25 மற்றும் 30 வயது மதிக்கத்தக்கவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தென்னிலங்கை அரசியல் கட்சி ஒன்றின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சாரதி என்று கூறப்படுகின்றது.
Discussion about this post