ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் இடையில் சந்திப்பொன்று நடந்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜப்பானியப் பேரரசர் ஹிரோனோமியா நரஹிட்டோவின் வாழ்த்துகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரிவித்த ஜப்பானியத் தூதுவர், ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, ‘சென்பிரான்சிஸ்கோ சமாதான மாநாட்டில்’ உரையாற்றி, 70 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. அதை முன்னிட்டு ஜப்பான் தூதரகமும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள விசேட நிகழ்ச்சி, செப்ரெம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Discussion about this post