சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடி நாட்டின் சுகாதார கட்டமைப்பை வீழ்ச்சியின் இறுதிக் கட்டத்துக்கு இட்டுச் சென்றுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதன் வரலாற்றில் மிக மோசமான சமூக – பொருளாதார நெருக்கடியின் மத்தியில் உள்ளது என்றும், கர்ப்பிணிப் பெண்களின் வாழ்வாதாரத்தை இந்த நிலை பாதித்துள்ளது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் உபகரணங்கள், மருந்து பற்றாக்குறை காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் கர்ப்பிணிப் பெண்கள் போசாக்கற்ற உணவு மற்றும் உணவுத் தட்டுப்பாட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் நிர்வாக இயக்குநர் நடால்யா கனெம்மை மேற்கோள்காட்டி ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
Discussion about this post