நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் பழுதடைந்துள்ள முதலாவது மின்பிறப்பாக்கியின் திருத்தப்பணிகள் நிறைவடைவதற்கு 14 முதல் 16 நாள்கள் தேவைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முதலாவது மின்பிறப்பாக்கி இன்று காலை திடீரென பழுதடைந்ததை அடுத்து, அனல் மின் நிலையத்தில் இருந்து தேசிய மின் விநியோகத்துக்கு முழுமையான பங்களிப்பை வழங்க முடியாது போனது.
நேற்றும், இன்றும் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நுரைச்சோலையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் என்று தெரியவருகின்றது.
நுரைச்சோலை அனல் மின்நிலையம் வழமைக்குத் திரும்பும்வரையில் நாளாந்த மின்வெட்டை 3 மணித்தியாலங்களாக அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று மின்சார சபைத் தகவல்கள் தெரிவித்தன. இது தொடர்பான அறிவித்தல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஊடாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post