சிறிலங்காவின் பிரபல யூரிப்பரும், கோட்டா கோ கம போராட்டத்தின் செயற்பாட்டாளருமான ரட்டா என அடைக்கப்படும் ரதிந்து சேனாரத்னவின் வங்கிக் கணக்கில் அடையாளம் தெரியாதவர்களால் 50 லட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.
இந்த உரிமைகோரப்படாத பணப் பரிவர்த்தனை தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கியில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ரட்டா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களைக் கைது செய்யும் முயற்சிகளில் ஒன்றாக இதைக் கருதுகின்றேன் என்று தெரிவித்துள்ள ரட்டா, இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.
Discussion about this post