யாழ்ப்பாணத்தில் கடந்த 3 மாதங்களாக அலைபேசித் திருட்டில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 15 லட்சம் ரூபா பெறுமதியான 43 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நாவற்குழி மற்றும் அரியாலையைச் சேர்ந்த 23, 24 மற்றும் 27 வயதுகளைச் சேர்ந்தவர்களே யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும், பஸ்களில் பயணிகளிடம் அலைபேசிகளைத் திருடுவதை வழமையாகக் கொண்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நடந்த பல்வேறு அலைபேசித் திருட்டுக்களுக்கும் இந்தக் கும்பலுக்கும் தொடர்புள்ளமை விசாரணைகளில் தரியவந்துள்ளது.
அலைபேசியைப் பறிகொடுத்தவர்கள் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்துக்கு வந்து அடையாளம் காட்ட முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post