அக்கராயன், முழங்காவில் வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பிறந்து இரண்டு அல்லது முன்று நாள்களேயான சிசு ஒன்று இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பிரதான வீதிக்கு அருகே உள்ளக வீதியொன்றில் துணியொற்றில் சுற்றப்பட்டிருந்த நிலையில், கைவிடப்பட்டிருந்த சிசு கைவிடப்பட்டிருந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சிசுவை மீட்டுள்ளனர்.
சிசு தற்போது கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. சிசு ஆரோக்கியமான நிலையில் உள்ளது என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post