ஜனாதிபதி மாளிகையில் இருந்து பொதுமக்களால் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட சுமார் 17 மில்லியன் ரூபா நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளது.
கடந்த 9ஆம் திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து, மக்கள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை ஆகியனவற்றிற்குள் பிரவேசித்திருந்தனர்.
ஜனாதிபதி மாளிகையில் இருந்த ஒரு கோடியே 78 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை அவர்கள் மீட்ட நிலையில், அதை உரிய வகையில் கொழும்பு கோட்டை பொலிஸாரிடம் கையளித்திருந்தனர்.
அதையடுத்து அந்தப் பணத்தை நீதிமன்றில் இன்று பாரப்படுத்துவதற்கும் அது தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Discussion about this post