புதுக்குடியிருப்பில் நீண்ட நாள்களாக நடந்த சைக்கிள் திருட்டுக்கள் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், 15 சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது மக்களிடையே சைக்கிள் பாவனை அதிகரித்துள்ள நிலையில், சைக்கிள் திருட்டுக்களும் அதிகரித்துள்ளன.
புதுக்குடியிருப்புப் பொலிஸ் பிரிவில் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரித்திருந்த நிலையில், பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
பாதுகாப்புக் கமராப் பதிவுகளைக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நேற்றுமுன்தினம் கைவேலியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். தொடர் விசாரணைகளில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த ஒருவரும், உடையார்கட்டைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணியாற்றும் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸாரால் 15 சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் புதுக்குடியிருப்புப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Discussion about this post