வீட்டில் சேமித்து வைத்திருந்த பெற்றோல் தீப்பிடித்ததால் குடும்பப் பெண் ஒருவர் தீயில் எரிந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் திருகோணமலை அன்புவழிபுரத்தில் நடந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் 47 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டின் பூசை அறையில் பெற்றோல் கலன்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்துள்ளது. நேற்றுக்காலை பூசை அறையில் விளக்கேற்றிய பெண், தீக்குச்சியை வீசி எறிந்தபோது, அது பெற்றோல் கலனில் வீழ்ந்து தீப்பற்றியுள்ளது.
பெரும் சுவாலையுடன் பற்றியெரிந்த தீ, பெண்ணின் மீதும் பற்றிக் கொண்டதில் அவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் உடல் திருகோணமலை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக உப்புவெளிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் தற்போது பெற்றோலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பலர் வீடுகளில் பெற்றோலைக் கலன்களில் சேமித்து வைத்துள்ளனர். பெற்றோலை இவ்வாறு வீடுகளில் சேமித்து வைப்பது அபாயகரமானது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post