அரசாங்கத்தை பதவி விலகச் செய்வதற்கான மக்களின் ஆர்ப்பாட்டங்களை புத்துயிர் பெறச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்த அமைச்சரவைக்கு தொடர்ந்தும் நாட்டை நிர்வகிக்கும் உரிமை கிடையாது என்று தெரிவித்த அவர், மக்களைப் பற்றி எவ்வித கவலையும் அற்ற அரசாங்கமே தற்போது நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ச குடும்பத்தின் பாதுகாவலராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்றும் குற்றஞ்சாட்டினார்.
கோத்தாபய ராஜபக்சவும், ரணில் விக்கிரமசிங்கவும் மீண்டும் அவர்களின் அரசியல் விளையாட்டுக்களை ஆரம்பித்துள்ளனர் என்று சுட்டிக்காட்டிய அநுரகுமார், மக்களின் ஆர்ப்பாட்டங்களை அடுத்தவாரம் மீண்டும் புத்துயிர் பெறச் செய்து, அவர்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post