மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று காலை நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கிச் சிகிச்சை பெற்றுவந்த நொச்சிக்குளத்தைச் சேர்ந்த ஒருவர் மீதே கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், அவரும் வைத்தியசாலை விடுதியில் தங்கிச் சிகிச்சை பெறுபவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மையில் நொச்சிக்குளத்தைச் சேர்ந்த இருவர் வாள்வெட்டில் கொல்லப்பட்டுள்ள நிலையில், இன்று நடந்த சம்பவம் அதனுடன் தொடர்புடையதா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post