சட்டவிரோதமாக அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் அளுத்கம கூட்டுறவு எரிபொருள் நிலைய உரிமையாளரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கலாவில கந்தேனிவாச என்ற இடத்தில் அதிக விலைக்குப் பெற்றோல் விற்பனை செய்தபோது, பெற்றோல் கையிருப்புடன் இவர் கைது செய்யப்பட்டார் என்று பேருவளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பணி முடிந்து வரும்போது தனது கணவர் கொண்டுவரும் பெற்றோலைத் தான் விற்பனை செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
பேருவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலை அடுத்த, சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு அந்தப் பெண் ஒரு போத்தல் பெற்றோலை 800 ரூபாவுக்கு விற்பனை செய்தார் என்றும், அதன்போது அவர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post