சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு வழங்கப்படும் மசகு எண்ணெய் அடிப்படைப் பணிகளுக்குக் கூடப் போதுமானதாக இல்லை என்பதால் அதன் செயற்பாடுகள் மீண்டும் நிறுத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித, தேவையான அளவு மசகு எண்ணெய்க்கான முன்பதிவுகளை வழங்கத் தவறியதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
சுத்திகரிப்பு நிலையத்தின் 60 வீத மசகு எண்ணெய் நுகர்வு, உலை எண்ணெய் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றது. சுத்திகரிப்பு நிலையத்தின் தொடர்ச்சியான செயற்பாட்டுக்கு போதுமான மசகு எண்ணெய் இல்லை என்று தெரிவித்த அவர், சுத்திகரிப்பு நிலையம் குறைந்தபட்ச கொள்ளளவில் இயங்குவதற்கு 3 ஆயிரம் மெற்றிக்தொன் மசகு எண்ணெய் தேவை என்று கூறினார்.
Discussion about this post