இந்தியாவின் மானியமாக 15 ஆயிரத்து 750 லீற்றர் மண்ணெண்ணெய் யாழ்ப்பாணத்துக்கு வழங்கப்படவுள்ளது. அது தீவகத்தின் நயினாதீவு, நெடுந்தீவு, எழுவைதீவு, அனலைதீவைச் சேர்ந்த 705 மீனவர்களுக்கு தலா 20 லீற்றர் வீதம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 45 ஆயிரத்து 771 படகுகள் மண்ணெண்ணெயில் இயங்குகின்றன. 420 படகுகள் டீசலில் இயங்குகின்றன.
இவற்றில் மேற்படி 4 தீவுகளையும் சேர்ந்த 705பேருக்கே இந்தியாவின் மானியமாக வழங்கப்படும் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளது. இந்த விநியோகம் இன்னும் ஒரு வாரத்துக்குள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மேற்படி தீவுகளில் புதுப்பிக்கதக்க சக்தி மூலமான மின்உற்பத்தியை சீனா மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில் அது இரத்துச் செய்யப்பட்டு இந்தியா அங்கு மின் உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post