மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆயிரத்து 348 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நேற்று 128 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், 99 பேர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 68 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 638 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், 836 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன என்றும் கூறினார்.
Discussion about this post