காலி முகத்திடலில் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட 17 பேருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சனத் நிசாந்த, பவித்திரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்த்தன உட்பட 17 பேருக்கே கோட்டை நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கும் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கபபட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்தப் பயணத் தடையை விதித்துள்ளது.
அதேவேளை, வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும், எனக்கோ எனது தந்தைக்கோ நாட்டை விட்டுச் செல்லும் எண்ணம் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்சவின் மகனுமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Discussion about this post