சண்டிலிப்பாய், பிரான்பற்றில் தீப்பிடித்து 16 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். தீப்பிடித்தமைக்கான காரணம் சரிவரத் தெரியவில்லை.
இன்று மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மகாஜனாக் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரத்தில் கற்கும் சுதர்சன் சதுர்சியா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
சிறுமி வீட்டின் அறையொன்றுக்குள் இருந்தபோது சிறுமி தீப்பரவலுக்கு ஆளாகியுள்ளார். அந்த அறைக்குள் சேமிக்கப்பட்ட பெற்றோல் அல்லது மண்ணெண்ணெய் இருந்தது என்று சந்தேகிப்படும் நிலையில் தீ பெரும் சுவாலையுடன் எரிந்துள்ளது.
சிறுமி உடலில் பெரும்பகுதி தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்டு சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் சிறுமியைக் காப்பாற்ற முடியவில்லை.
சிறுமியின் சடலம் சங்கானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் இளவாலைப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post