கொழும்பு, காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் 3 வாரங்களுக்கு மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று அந்தப் பகுதிகளில் பெருமளவிலான கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டதால் பதற்ற நிலைமை காணப்படுகின்றது.
போராட்டம் இடம்பெறும் இடத்தில் எந்தவிதமான குழுப்பங்களும் இடம்பெறாதபோதும், பெரும் எண்ணிக்கையில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
சுமுகமான முறையில் நடைபெறும் போராட்டத்தைக் கலைக்கும் அரசாங்கத்தின் முயற்சியாக இது இருக்கலாம் என்றும் மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில், அந்தப் பகுதியில் இருந்து படிப்படியாகப் பொலிஸார் அந்த இடங்களில் இருந்து அகன்று சென்றதைக் காணமுடிந்தது.
Discussion about this post