பளை, இயக்கச்சியில் நேற்று நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாளையடி, உடுத்துறை வடக்கைச் சேர்ந்த ஞானசீலன் தவமலர் (வயது-60) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண், இயக்கச்சியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை நோக்கி வீதியைக் கடக்க முன்றபோது, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ் பின்புறமாக மோதியது என்று தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் உடல் பளை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்துத் தொடர்பான விசாரணைகளை பளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post