யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் (யாழ்கோ) ஒரு லீற்றர் பாலின் விலை 140 ரூபா என நிர்ணயம் செய்துள்ளது. இந்த விலை மாற்றம் எதிர்வரும் 5ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியாளரின் உற்பத்திச் செலவை ஈடு செய்யும் வகையில் பாலின் கொள்விலையை அதிகரிக்க வேண்டியுள்ளது என்றும், அதனால் பாலின் விலையை அதிகரிப்பது தவிர்க்க முடியாதது என்றும் அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post