இலங்கை மத்திய வங்கி கடந்த இரு நாள்களில் பெருந்தொகை நாணயங்களை அச்சிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு தினங்களில் இலங்கை மத்திய வங்கி 19.6 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பின்னர் இலங்கை மத்திய வங்கி வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நாணயத்தாள்களை அச்சிட்டு வருகின்றது.
நாட்டின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தமைக்கு தொடர்ச்சியாக நாணயத்தாள்களை அச்சிட்டு வெளியிட்டமையும் ஒரு காரணம் என்று சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.
Discussion about this post