யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடமாடிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரின் விசேட வீதிச் சோதனை நடவடிக்கைகளில், ஊரடங்கு வேளையில் தேவையற்று நடமாடிய குற்றச்சட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும், அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, கொழும்பிலும் நாட்டின் பல பகுதிகளிலும் ஆயிரக்கணக்கானவர்கள் நேற்று வீதிகளில் இறங்கி அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஆயினும் யாழ்ப்பாணம் நேற்று அமைதியாகவே இருந்தது.
Discussion about this post