இலங்கையில் 24 கரட் பவுண் ஒன்றின் விலை ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாவை எட்டியிருக்கின்றது. இலங்கை வரலாற்றில் தங்கத்தின் அதிகூடிய விலை உயர்வு இதுவாகும்.
கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. கடந்த 30 நாள்களில் தங்கத்தின் விலை சுமார் 3 சதவீத்தால், அதாவது 56 டொலரால் உயர்ந்துள்ளது.
அதேநேரம் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுண் ஒன்று ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாவை எட்டியுள்ளது. யாழ்ப்பாணத்திலும் இந்த விலை மட்டங்களே காணப்படுகின்றன. ஆயினும் இன்றும் விலை அதிகரிக்ககூடும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
ரஷ்யா – உக்ரைன் இடையான போர் மற்றும் எரிசக்தி நெருக்கடி ஆகியவை காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. தற்போது ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை ஆயிரத்து 958 டொலராகக் காணப்படுகின்றது.
அதேநேரம் உலக சந்தையில் தங்கத்தின் விலையில் இறக்கம் ஏற்பட்டாலும், இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்புச் சரிந்து வருகின்றமையே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
Discussion about this post