8 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 வயதுச் சிறுவனை சான்று பெற்ற நன்னடத்தைப் பாடசாலையில் சேர்க்க யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
பாடசாலைக்குச் செல்லும் 8 வயதுச் சிறுமியை, அயல் வீட்டு 14 வயதுச் சிறுவன், விளையாட்டின்போது பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்று கூறப்படுகின்றது.
அதைக் கண்ணுற்ற அயல்வீட்டு நபர் ஒருவர், சிறுமியின் தாய்க்கு இது தொடர்பில் தெரியப்படுத்தியதை அடுத்து, தாய் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சிறுமியை சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி பரிசோதனைகளை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக சிறுவன் கைது செய்யப்பட்டார்.
நேற்று சிறுவனைப் பொலிஸார் சிறுவர் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, சான்று பெற்ற சிறுவர் நன்னடத்தைப் பாடசாலையில் சேர்ப்பித்து தடுத்து வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.
Discussion about this post