கிளிநொச்சி, விவேகாநந்தா நகரில் 208 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்டுள்ள கேரளக் கஞ்சாவின் பெறுமதி சுமார் 5 கோடி ரூபா என்று தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் விவேகாநந்தா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார் என்று கூறப்படுகின்றது. விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், நேற்று மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து சொகுசுக் கார் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது என்றும், சந்தேகநபர் கிளிநொச்சிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
Discussion about this post