சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி சிறிலங்கா திரும்புவார் என்று ரஷ்யாவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு விசாரணைக்காகச் சென்றிருந்த உதயங்க வீரதுங்க, அங்கிருந்து வெளியேறும்போது ஊடகங்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
விமானப் படைக்கு மிக் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 7 மில்லியன் அமெரிக்க டொலரை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்று உதயங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அது தொடர்பான வாக்குமூலம் வழங்குவதற்காகவே உதயங்க நேற்றுக்காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்குச் சென்றிருந்தார்.
Discussion about this post