யாழ்ப்பாணம், ஏழாலையில் வீடொன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
15 வயதுச் சிறுமியை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் ஆத்திரமுற்ற இளைஞர் ஒருவர், வன்முறைக் கும்பல் ஒன்றுடன் இணைந்து சிறுமியின் வீட்டுக்குத் தீ வைத்துள்ளார் என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.
நேற்றுமுன்தினம் வீட்டுக்குள் நுழைந்த 4 பேர் கொண்ட குழு ஒன்று வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி வீட்டுக்குத் தீ வைத்து விட்டுத் தப்பிச் சென்றது என்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ள நிலையில், வீட்டில் இருந்த பொருள்கள், ஆவணங்கள் அனைத்தும் தீயில் கருகியுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Discussion about this post