13 வயதுச் சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திக் கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 73 வயது முதியவர் ஒருவர் யாழ்ப்பாணம், இருபாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வழங்கிய தகவலுக்கு அமைய கோப்பாய் பொலிஸார் சந்தேக நபரை நேற்றுக் கைது செய்துள்ளனர்.
சிறுமி கர்ப்பமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கடந்த வாரம் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குத் தகவல் கிடைத்துள்ளது. அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post