யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
கடந்த 10ஆம் திகதி கொன்று புதைக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. இது தொடர்பில் மருதங்கேணிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஒருவர் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி ஊடாகச் சரணடைந்துள்ளார்.
சரணடைந்தவர் கொல்லப்பட்டவரின் மனைவியின் சகோதரர் என்று வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். குடும்பத் தகறாறு காரணமாகவே கொலை நடந்தது என்றும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபரை, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post