யாழ்ப்பாணம் பாசையூர் ஈச்சமோட்டை பகுதியில் வீடு உடைத்து 25 பவுன் நகை திருடப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டில் முதியவர் மட்டுமே வசித்து வந்தார் என்றும், அவர் வீட்டில் இல்லாத நேரம் வீட்டின் பின்புறக் கததை உடைத்து நகைகள் திருடப்பட்டுள்ளன என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸாரும், தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post