தெல்லிப்பழையில் வீடொன்றில் திருடிய குற்றச்சாட்டில் இருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தெல்லிப்பழையில் கடந்த 28ஆம் திகதி இரவு வீட்டில் எவரும் இல்லாத நிலையில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் பணம், நகைகள், பொருள்களைத் திருடியிருந்தனர்.
ஒரு லட்சம் ரூபா பணமும், ஒரு லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய பொருள்கள், நகைகள் என்பனவும் திருடப்பட்டன என்று வீட்டு உரிமையாளர்களின் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று சந்தேகநபர்கள் இருவரைக் கைது செய்துள்ளனர். அளவெட்டியைச் சேர்ந்த ஒருவரும், மாசியப்பிட்டியைச் சேர்ந்த ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post