முல்லைத்தீவு – முள்ளிவாய்க்காலில் ஆசிரியை ஒருவர் நான்கு வயது தொடக்கம் பத்து வயது வரையான பிள்ளைகளுக்காக அவர் வீட்டில் தனியார் வகுப்புக்களை எடுக்கின்றார்.
இந்நிலையில் அந்த ஆசிரியையின் அர்ப்பணிப்பும் பிள்ளைகள் மீதான அவருடைய அக்கறையும் பலரையும் ஆச்சரியப்பட வைத்தாக முகநூல் வாசி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது , குறித்த ஆசிரியை தன்னிடம் கற்கும் முப்பது பிள்ளைகளின் பெற்றோரிடமும் சின்னதாக “கடைக்கொப்பி” சைஸில் ஒரு ரெக்கோர்ட் புக் கொடுத்திருக்கிறார்.
அந்த ரெக்கோர்டில் பிள்ளை அன்றிரவு சுயகற்றல் செய்த நேரத்தை நேர்மையோடு பதிவு செய்து கையெழுத்து வைத்து
கொடுத்து விட வேண்டும் என்பது. எழுமாற்றாக ஐந்தாம் வகுப்பு பிள்ளை ஒருவரின் இந்த ரெக்கோர்டை பார்த்த போது
சந்தோசமாக இருந்தது.
முக்கியமாக, ஆசிரியையின் குறிப்பும் அவர் வரைந்த சிரித்த முகமும் என அவர்
குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post