வடமராட்சியில் வீடு உடைத்துத் திருட்டு மற்றும் வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பொலிஸ் புலனாய்வாளர்கள் முன்னெடுத்த விசாரணைகின் அடிப்படையில் அல்வாய் பகுதியில் வைத்து நேற்று 23 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் இருந்து 3 பவுண் தாலி, 2 பவுண் சங்கிலி, மோட்டார் சைக்கிள் மற்றும் ஐ போன் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை சந்தேகநபரின் உடைமையில் இருந்த 3 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, சந்தேகநபருடன் இணைந்து குற்றங்களுடன் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகியுள்ளனர் என்றும், அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
Discussion about this post