யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் மூன்று பெண்களிடம் சுமார் 10 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
வல்லைவெளி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை வழிமறித்த வழிப்பறி கொள்ளையர்கள், கத்தியை அவர்களின் கழுத்தில் வைத்து அவர்கள் அணிந்திருந்த ஒன்றரை பவுண் தங்க சங்கிலி உட்பட சுமார் எட்டு பவுண் நகைகளைக் கொள்ளையிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் இடம்பெற்று ஒரு சில மணி நேரத்தில், வல்லைவெளி பகுதி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரை பின்னால் வந்து மோதி அப்பெண்ணை விபத்துக்கு உள்ளாக்கி விட்டு அந்தப் பெண் அணிந்திருந்த சுமார் ஒன்றரை பவுண் தங்க சங்கிலி மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்ந்தப் பகுதி நீரேந்து பகுதியாக காணப்படுவதுடன் ஆள் நடமாட்டம் குறைந்த குடியிருப்புக்கள் அற்ற பகுதியாகும். அங்கு வழிப்பறி கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வீதி விளக்குகளைப் பொருத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post