பொது இடங்களில் குப்பை வீசுபவர்களை ஆதாரத்துடன் அறிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவது என்று யாழ்ப்பாணம் மாநகர சபை தீர்மானித்துள்ளது.
பொது இடங்களில் குப்பை வீசுபவர்களிடம் இருந்து அறவிடப்படும் தண்டப்பணத்தில் 10 வீதம் தகவல் வழங்கியவருக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற மாநகர சபைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாநகர எல்லைக்குட்பட்ட குடியிருப்பாளர்கள்,அவர்களின் வீடுகளுக்கு முன்னுள்ள வீதியோரத்தைத் தூய்மையாக பேண வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூய்மையை பேணாதவர்களிடம் இருந்து தண்டப் பணம் அறவிடப்படும் என மாநகர முதல்வரால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
Discussion about this post