யாழ்ப்பாணம் நகர் பகுதியில் எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர் கொண்டு சென்ற ஒருவரை வழிமறித்த இனந்தெரியாதவர்கள் தற்களை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறி மிரட்டி எரிவாயு சிலிண்டரையும், பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட நால்வரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் கஸ்தூரியார் வீதியில் பயணித்த குடும்பத் தலைவர் ஒருவரிடமே எரிவாயு சிலிண்டரும், 25 ஆயிரம் ரூபாவும் வழிப்பறி நடந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், ஒரு சில மணி நேரங்களில் கந்தர்மடத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபா பணமும், எரிவாயு சிலிண்டரும் கைப்பற்றப்பட்டுள்ளது. ஏனைய மூவரும் தேடப்பட்டு வருகின்றனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னைய காலங்களில் நாட்டில் நகைகள், பணம் போன்றவையே வழிப்பறி செய்யப்பட்டு வந்தன. தற்போது எரிவாயு சிலிண்டரை வழிப்பறி செய்யும் அளவுக்கு நாட்டின் நிலைமை மோசமாகியுள்ளது.
Discussion about this post