யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள உணவுக் களஞ்சியம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் உடல் தூக்கிட்ட நிலையில் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
38 வயதுடைய இளைஞர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 19ஆம் திகதி வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார் என்றும், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை என்றும் குடும்பத்தினர் முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டுக்கு அமைய நடவடிக்கை எடுத்த பொலிஸார், யாழ்ப்பாணம் ராஜா திரையரங்குக்கு முன்னுள்ள உணவுக் களஞ்சியத்தில் இளைஞரின் உடலை நேற்றுக் கண்டுபிடித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Discussion about this post